Arulmigu Angalamman temple-festivals

1. சித்திரை - சித்திரை முதல் நாள் மூலவர் மீது நேரடியாக சூரிய ஒளி விழுகிறது. அன்று சிறப்பு பூஜையும் நடைபெறும். சித்திரை பெளர்ணமி திருவிளக்கு பூஜை

2. ஆடி - ஆடி ஐந்து வெள்ளிக்கிழமைகளிலும் ஊஞ்சல் உற்சவம் மற்றும் உற்சவ மூர்த்தி திருவீதி உலா

3. புரட்டாசி - நவராத்திரி கொழு அம்புசேர்வை நிகழ்ச்சி

4. கார்த்திகை - தீப திருவிழா

5. மார்கழி - ஆருத்திரா தரிசனம்

6. தை - தை 1 ஆம் நாள் - ஊஞ்சல் உற்சவம் மற்றும் உற்சவ மூர்த்தி திருவீதி உலா தை அமாவாசை - ஊஞ்சல் உற்சவம் மற்றும் உற்சவ மூர்த்தி திருவீதி உலா

7. மாசி - மகா சிவராத்திரி 10 நாட்கள் திருவிழா

முதல் நாள் : கொடியேற்றம்,

இரண்டாம் நாள் மகா சிவராத்திரி : கங்கணம் கட்டுதல்,

வெற்றிலை பாக்கு பிடித்தல்,அலங்காரம்,மகாசிவராத்திரி, தேவேந்திர பூஜை, நந்தீஸ்வரனை அழைத்தல், முகம் எடுத்து ஆடுதல், அம்மன் சப்பரத்தில் மயானம் செல்லுதல், மயான பூஜை வல்லாள கண்டனை சம்ஹாரம்செய்தல்.

முன்றாம் நாள் : சக்தி விந்தை அழைத்தல், அலகு தரிசனம்

நான்காம் நாள் : பூவோடு எடுத்தல், அம்மன் ரிஷப வாகனத்தில் பவனி வருதல், பாகை விளையாடுதல், அம்மன் வரலாற்றை பாட்டுடன் எடுத்துரைத்தல்

ஐந்தாம் நாள் : பரிவேட்டை, அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் அம்மன் தண்ணீர் பந்தல், ஸ்ரீ விநாயகர் கோயிலுக்குச் சென்று வேட்டையாடி வருதல்.

ஆறாம் நாள் : அம்மனுக்கு மாவிளக்கு செலுத்துதல் வேடகிரி சிம்ம வாகனத்தில் பவனி வருதல் மஞ்சள் நீர் அம்மன் புஷ்பக விமானத்தில் பவனி வருதல்

ஏழாம் நாள் : மஹாகும்ப பூஜை, பேச்சியம்மன் பூஜை எட்டாம் நாள், ஒன்பதாம் நாள், பத்தாம் நாள் - இம் மூன்று நாட்களிலும் சிறப்பு பூஜைகளும், சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெறும்.

மாதந்தோறும் அமாவசை மற்றும் பெளர்ணமி நாட்களில் சிறப்பு பூஜைகளும், அமாவாசைகளில் அம்மனுக்கு திருவீதி உலாவும், ஊஞ்சல் உற்சவப்பூஜைகளும் நடைபெற்றுக் கொண்டிருப்பது சிறப்பாகும்.

Copyrights © 2013 Arulmigu Angalamman temple,Muthanampalayam,Tiruppur